×

தமிழகத்தில் பாஜவை தனிமைப்படுத்த வேண்டும்: பிரகாஷ்கரத் ஆவேசம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று இரவு நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்கரத் பேசியதாவது: ஒன்றிய அரசு வகுப்புவாத மதவெறி கொண்ட அரசாக உள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை செயல்படுத்துகிற வகையிலையே செயல்பாடு உள்ளது. இஸ்ஸாமியர்களின் மசூதிகள் அடியில் கோயில் இருந்ததாக பாஜகவினர் கருத்துக்களை எழுப்புகிறார்கள். இதன் மூலம் மோதலை ஏற்படுத்துகின்றனர். ஆர்எஸ்எஸ், பாஜக இந்துக்கள், முஸ்ஸீம்கள் என்று மத அடிப்படையில் அரசியலை நகர்த்துகிறார்கள். மத அடிப்படையில் மக்களை பிரித்து மதவெறி அரசியலை செய்யும் பாஜக ஒரு பக்கம் கார்ப்பரேடுகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசாக உள்ளது. இதனால் சமத்துவ பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.

அம்பானி, அதானி, டாடா, பிர்லா, குழுமங்களுக்கு ஆதாயமாக ஒன்றிய அரசு செயல்படுகிறது. எல்லாவற்றையும் தனியார் மயமாக்கும் செயலில் ஒன்றிய அரசு செயல்படுகிறது. இதனால் தொழிலாளி வர்க்கம், விவசாய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை தனிமைப்படுத்த வேண்டும், தோற்கடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுகிறது. தமிழகத்தில் 2019, 2021ம் ஆண்டு தேர்தலில் மதச்சார்பற்ற அணி வெற்றி பெற்றோம். தமிழகத்தில் கால் ஊன்ற ஆர்எஸ்எஸ், பாஜக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்துத்துவாவை மக்களிடம் திணிக்க பார்த்தார்கள், அது முடியவில்லை. நம் கூட்டணி பலமாக இருந்தது. இவர் அவர் பேசினார்.

The post தமிழகத்தில் பாஜவை தனிமைப்படுத்த வேண்டும்: பிரகாஷ்கரத் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : BAJA ,Viluppuram ,Prakasharat ,Marxist Communist General Meeting ,Vilupura ,Union Government ,RSS ,Bahia ,of the Issaeans ,Tamil Nadu ,
× RELATED கஞ்சா சாக்லேட் விற்ற 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை