திருச்சி: திருச்சியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி நீர் கடலில் கலந்து வீணாகிறது, எனவே காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். காவேரி – குண்டாறு திட்டத்திற்கான நிதியை முழுமையாக ஒதுக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி அரசு கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் தமாகா கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. ஒத்த கருத்து என்பது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது. அது தேர்தல் நேரத்தில் தெளிவாக தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.