மதுரை: யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் நடிகர் விஜய் இருப்பது போல மார்ஃபிங் செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளதாக தூத்துக்குடியைச் சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். மார்ஃபிங் செய்து படம் வெளியிட்டது தொடர்பாக புகாரை பெற்று, விசாரணை நடத்த ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புகார் மீது காவல்துறை விசாரணை நடத்தி 2 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
The post யூடியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவு appeared first on Dinakaran.