×

ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து

ஹராரே: ஜிம்பாப்வேயில் பல ஆண்டுகளாகவே மரண தண்டனைக்கு எதிராக தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அங்கு, நாட்டின் அதிபரான எம்மர்சன் மனங்காக்வா மரண தண்டனைக்கு எதிரான எதிர்ப்பை பற்றி பகிரங்கமாக பேசினார். இந்நிலையில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான சட்டமசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதான, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு மனதாக நிறைவேறியது. இதையடுத்து, மரண தண்டனை ரத்து செய்யும் சட்டமசோதாவுக்கு அதிபர் எம்மர்சன் மனங்காக்வா ஒப்புதல் அளித்தார்.

இதன் மூலம் ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் தற்போது 60 கைதிகள் மரண தண்டனையில் உள்ளனர். புதிய சட்டத்தை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து appeared first on Dinakaran.

Tags : Zimbabwe ,Harare ,Emmerson Manangagua ,
× RELATED காயத்தால் விலகிய ஆப்கானிஸ்தான் வீரர்