இந்த நோய் பாதிக்கப்பட்டால் காய்ச்சல், உடல் வலி, தலை வலி குறிப்பாக கருப்பு காயங்கள் உடலில் பல்வேறு பகுதிகளில் ஏற்படும். தமிழகத்தில் தெற்கு மாவட்டங்களில் இதுபோன்ற நோய்கள் பரவுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இந்த நோயால் பலர் பாதிக்கப்
பட்டுள்ளனர். குறிப்பாக விவசாய தொழிலில் ஈடுபடும் நபர்கள், புதர் பகுதிகள் நிறைந்த இடத்தில் வசிக்கும் நபர்கள், காடுகளில் சுற்றுபவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்த நோய் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நபர் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே 5 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் ஐஜிஎம் ஆன்ட்டிபாடி, எலிசா உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும். சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த நோய் பற்றியான விழிப்புணர்வை அதிக அளவில் மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழகம் முழுவதும் ஸ்க்ரப் டைபஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு appeared first on Dinakaran.