தக்கலை அருகே பள்ளி மாணவி பலாத்கார வழக்கு: உடற்கல்வி ஆசிரியை சஸ்பெண்ட்

குமரி: தக்கலை அருகே பள்ளி மாணவி பலாத்கார வழக்கில் கவனக்குறைவாக இருந்ததாக உடற்கல்வி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாணவியை பெற்றோரிடம் ஒப்படைக்காத அரசு உதவி பெறும் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியை ஜெயரூபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைப்பந்து போட்டியில் பங்கேற்க டிச.25ல் உடற்பயிற்சி ஆசிரியை மற்றும் 14 மாணவிகள் திருச்சி சென்றனர். 26ம் தேதி இரவு மாணவிகள், உடற்பயிற்சி ஆசிரியை குமரி மாவட்டம் திரும்பினர்; சக மாணவிகள் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இரவு 9 மணியளவில் மாணவி இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்றபோது 2 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

The post தக்கலை அருகே பள்ளி மாணவி பலாத்கார வழக்கு: உடற்கல்வி ஆசிரியை சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: