ஆனால் ஒன்றிய அரசும், அரியானா மாநில அரசும் கண்ணீர்ப் புகைக் குண்டு, ரப்பர் தோட்டா போன்றவற்றைக் கொண்டு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கின. இதனால் கொந்தளித்த உணர்வுடன் அன்றைய தினமே பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜிக்ஜித் சிங் தல்லேவால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை அறிவித்தார். அன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தல்லேவால் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி மயக்கமடைந்தார். பின்னர் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவர்கள் வலியுறுத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். இந்த நிலையில், மஜக தலைவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாய் – ஹரியானா எல்லையில் இன்று 40 வது நாளாக விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித்சிங் டல்லேவால் உண்ணாவிரதத்தை நீடித்து வருகிறார். இதன் காரணமாக அவரது உடல் நலிவடைந்து 18 கிலோ எடை குறைந்துள்ளது. பிறர் பசியை போக்கும் விவசாயிகளின் உரிமைகளுக்காக, அவர் தனது பசியை துறந்து போராடி வருகிறார். இது ஒரு விவசாய சங்க தலைவருடைய போராட்டம் அல்ல…கோடிக்கணக்கான விவசாயிகளுடைய உணர்வுகளை உள்ளடக்கிய அறப்போராட்டம் என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
The post பஞ்சாய் – ஹரியானா எல்லையில் நடப்பது விவசாயிகளுடைய உணர்வுகளை உள்ளடக்கிய அறப்போராட்டம் என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்: மஜக தலைவர் தமிமுன் அன்சாரி appeared first on Dinakaran.