நாகர்கோவில் : கண்ணாடி இழை பாலம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என எடப்பாடி கூறியதற்கு அமைச்சர் எ.வ.ேவலு பதிலடி கொடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று அளித்த பேட்டி:
கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்று எடப்பாடி கூறியுள்ளார். அவர் முன்னாள் அதிகாரிகளின் கருத்தை கேட்டுக் கொண்டு தவறான கருத்தை சொல்கிறார். அவர் இதே போல் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணை யாரும் வெளியிடவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஒப்பந்தம் விடப்பட்டு கண்ணாடி இழை கூண்டு பாலம் கட்டப்பட்டுள்ளது.
பாலம் அமைப்பது தொடர்பாக நானும், பல அமைச்சர்களும் அதிகாரிகளும் இங்கு தான் ஆய்வு நடத்தி உள்ளோம். இது ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவரும் அறிந்ததாகும். திட்ட அறிவிப்பு யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதற்கான மதிப்பீடுத் தொகை, பணிகளை தொடங்குவது, அதற்கான ஒப்பந்தம், ஆய்வு என தி.மு.க அரசு நிறைவேற்றி உள்ளது. அவரது இருப்பிடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக எடப்பாடி இவ்வாறு சொல்வது புதிதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
The post கண்ணாடி இழை பாலம் திட்டம்; எடப்பாடிக்கு அமைச்சர் பதிலடி appeared first on Dinakaran.