×

களக்காடு தலையணையில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்

களக்காடு: களக்காடு வனப் பகுதியில் சூழல் சுற்றுலா தலமான தலையணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலா பயணிகள் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், கத்தி, அரிவாள், தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தலையணை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் வனத்துறை ஊழியர்கள் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

உள்ளூர் மட்டுமின்றி, நெல்லை, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கார், வேன்களில் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தலையணையில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் தென்பட்டது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் வந்திருந்த சுற்றுலா பயணிகள் தலையணையில் ஆனந்தமாக குளித்தனர். ஒன்றாக அமர்ந்து உணவருந்தியும் சூழல் சுற்றுலாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். களக்காடு வனச்சரக அலுவலர் பிரபாகர் தலைமையில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post களக்காடு தலையணையில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kalakkadu ,
× RELATED களக்காடு அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: ஆயிரம் வாழைகள் நாசம்