×

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முகூர்த்தக்கால் ஊன்றி பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி!!

வாடிப்பட்டி:தை பொங்கல் விழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு களைகட்டும். பொங்கலன்று ஜன.14ல் அவனியாபுரம், ஜன.15ல் பாலமேடு, ஜன.16ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாட்டினரும் ஆர்வமாக பங்கேற்று பார்வையிடுவார்கள். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாட்டு பணிகளை முகூர்த்த கால் ஊன்றி தொடங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். வாடிவாசல், பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு முகூர்த்தக்கால் ஊன்றி பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி. மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், காவல் ஆணையாளர் லோகநாதன், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளரிடம் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது,”அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகள் வழக்கம் போல அரசு சார்பில் நடைபெறும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று முகூர்த்தக்கால் நடுவதோடு தொடங்கியுள்ளது. தவறான தகவலை எடிட் செய்து பரப்புகிறார்கள். நான் அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவான ஆள். ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து ஆண்ட பரம்பரை என்றுதான் கூறினேன்; எனது பேச்சின் முழு வீடியோவை பார்க்கவும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முகூர்த்தக்கால் ஊன்றி பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் மூர்த்தி!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Avaniyapuram Jallikattu ,Minister Murthy ,Mukurtakal ,Vadipatti ,Thai Pongal festival ,Jallikattu ,Madurai district ,Pongal ,Avaniyapuram ,Palamedu ,Alanganallur ,Tamil Nadu ,Madurai Avaniyapuram Jallikattu ,
× RELATED பொங்கலன்று நடைபெறும் அவனியாபுரம்...