திருவண்ணாமலையில் விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுைற மற்றும் வார இறுதி விடுமுறை தினமான ேநற்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக, வெளி மாவட்ட மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடக மாநில பக்தர்கள் வருகை அதிகரித்தது.

அதோடு, சபரிமலை செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அதனால், அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாட வீதி வரை தரிசன வரிசை சுமார் 1 கிமீ தூரம் நீண்டிருந்தது. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பிறகே தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

பொது தரிசன வரிசை ராஜகோபுரம் வழியாகவும், ₹50 கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்்டது. தரிசனம் முடிந்ததும், தெற்கு கோபுரம் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். வழக்கம் போல, சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. விரைவுதரிசனத்துக்காக ஒற்றை வழி தரிசன முறை ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனாலும், அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில், கிளி கோபுரம் நுழைவு வாயில்களில் நெரிசல் காணப்பட்டது. பக்தர்கள் வருகை அதிகரித்ததால், திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மாட வீதியில் கார் உள்ளிட்ட வாகனங்கள் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், நாளை மறுதினம் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, அண்ணாமலைாயார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும், மாட வீதியில் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலையில் விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது appeared first on Dinakaran.

Related Stories: