சென்னை: கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்பட புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் நேற்று அறிவித்த நிலையில் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும். காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகள் உருவாக்கப்படும். திருவாரூர், திருவள்ளூர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்பட புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்க அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.