×

பனப்பாக்கம் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் தனியார் தொழிற்சாலை கழிவுகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

ஸ்ரீபெரும்புதூர், டிச. 30: பனப்பாக்கம் ஏரியில் டன் கணக்கில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பனப்பாக்கம் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரி 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது, நாளுக்கு நாள் ஒரகடம் சுற்றுப்புற பகுதிகளில், தொழிற்சாலைகள் வர தொடங்கியதால், இங்கு விவசாயம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஏரி, வட்டம்பாக்கம், பனப்பாக்கம் ஆகிய கிராம மக்களின் நீர் ஆதாரமாக உள்ளது.

இந்தநிலையில், வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில், தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும், ஆயில், ரப்பர், மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், லாரிகள் மூலம் கொண்டு வந்து டன் கணக்கில் கொட்டப்பட்டு வருகிறது. இவற்றை இரவு நேரங்களில், மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து கொளுத்துகின்றனர். இதனால் ஏரி, நீர் மாசடையும் நிலை உருவாகியுள்ளது. எனவே, ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பனப்பாக்கம் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் தனியார் தொழிற்சாலை கழிவுகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Panapakkam lake ,Sriperumbudur ,Public Works Department ,Panapakkam ,Kundrathur ,Kanchipuram district ,Dinakaran ,
× RELATED திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார்...