தாம்பரம்: கிழக்கு தாம்பரம் பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் உள்ளன. இவை அனைத்தும் அப்பகுதியில் உள்ள கல்லூரி வளாகம், கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானம் போன்ற பகுதிகளில் சுற்றித் திரிவது வழக்கம். இவ்வாறு சுற்றித் திரியும் மான்கள் தெருக்கள் மற்றும் சாலைகளில் அடிக்கடி வந்து செல்லும். அப்படி வந்து செல்லும்போது அடிக்கடி மான்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும், வயல்களில் உள்ள கிணறுகளில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி ஏற்பட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சேலையூர் – அகரம் தென் பிரதான சாலையில் சாலையில் ஓடி வந்த புள்ளிமான் ஒன்று அவ்வழியாக சென்ற வாகனத்தில் அடிபட்டு கால் உடைந்த நிலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியது. இதனைக் கண்டு கல்லூரி மாணவர்கள் சிலர் மானை பத்திரமாக மீட்டு சேலையூர் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டுச் சென்றனர். தொடர்ந்து இதுபோன்று மான்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருவதால் இவற்றை தடுக்கும் வகையில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சேலையூர் அருகே வாகனம் மோதி மான் படுகாயம்: வனத்துறையிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.