- வலசரவக்கம்
- புளியந்தோப்பு
- துணை ஆணையாளர்
- முத்துக்குமார்
- பெங்களூரு
- ஓட்டேரி
- இன்ஸ்பெக்டர்
- ரமேஷ்
- பெரம்பூர்
வளசரவாக்கம்: பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் மெத்தாபெட்டமின் எனும் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் காலை ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் உள்ள ஜமாலயா பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் 7 கிராம் மெத்தாபெட்டமின் எனும் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அயனாவரம் மதுரை பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (22) என்பது தெரிய வந்தது.
ரயில் மூலம் பெங்களூரு சென்று அங்கு ஏற்கனவே மணிமாறனுக்கு சிறையில் அறிமுகமான நாசர் என்பவர் மூலம் மெத்தாபெட்டமின் வாங்கியது தெரிய வந்தது. இவர் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (23) மற்றும் கவுதம் (24) ஆகியோருடன் சேர்ந்து மெத்தாபெட்டமின் பயன்படுத்தியுள்ளார். மணிமாறன் கொடுத்த தகவலின் பேரில் ஓட்டேரி போலீசார் சிவகுமார் மற்றும் கவுதம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மெத்தாபெட்டமின் கடத்திய 3 பேர் கைது appeared first on Dinakaran.