பணமோசடி வழக்கு சட்டீஸ்கர் காங்.எம்எல்ஏ வீட்டில் ஈடி சோதனை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் கடந்த 2019-2022ம் ஆண்டு முதல்வராக பூபேஷ் பாகல் இருந்தபோது மதுபான ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானங்களை சட்டவிரோதமாக விற்று சுமார் ரூ.2100 கோடி மோசடி நடந்தாக கூறப்படுகின்றது. இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் முன்னாள் கலால் துறை அமைச்சரான கவாசி லக்மாவுக்கு 2020 -2022ம் ஆண்டு வரை அவரது பதவிக்காலத்தின்போது மாதத்துக்கு ரூ.2கோடி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் லக்மாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். ராய்ப்பூரில் உள்ள லக்மாவின் வீடு, சுக்மா மாவட்டத்தில் உள்ள அவரது மகன் ஹரிஷ் வீடு மற்றும் அவர்களோடு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

The post பணமோசடி வழக்கு சட்டீஸ்கர் காங்.எம்எல்ஏ வீட்டில் ஈடி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: