முதற்கட்ட தகவலின் அடிப்படையில் விஷ்ணு சேட் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். அதில் அமைச்சர் தனஞ்சய் முண்டேவுக்கு நெருக்கமானவரான வால்மிக் காரத் என்பவரும் ஒருவர். இதனால் இந்த கொலையில் அமைச்சர் தனஞ்சய் முண்டேவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் குரல் கொடுத்துள்ளன.
இதற்கிடையே, இந்த கொலையில் தனஞ்சய் முண்டேவுக்கு மராத்தி நடிகை பிரஜக்தா மாலி உதவியதாக கூறியது சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகை பிரஜக்தா மாலி, ‘‘தனஞ்சய் முண்டேவின் பார்லி தொகுதியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக நான் சென்றிருந்தேன். ஆனால் தவறான நோக்கத்துடன் என் பெயரை இந்த கொலையில் பாஜ எம்எல்ஏ இழுத்துள்ளார். இதற்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’’ என எச்சரித்துள்ளார்.
The post மகாராஷ்டிராவில் பரபரப்பு பஞ். தலைவர் கொலையில் அமைச்சருக்கு தொடர்பா? நடிகை மூலம் வலைவிரித்ததாக தகவல் appeared first on Dinakaran.