பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்படும். ஏற்கனவே 1.40 லட்சம் பக்தர்கள் ரூ.300 சிறப்பு நுழைவுச் தரிசன டிக்கெட்களை டிசம்பர் 24ம்தேதியன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டதில் அனைத்து முன்பதிவு செய்து கொண்டனர். ஜனவரி 10ம்தேதி மட்டும் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் 1500, மீதமுள்ள 9 நாட்களுக்கு ஒருநாளைக்கு 2000 டிக்கெட்டுகள் மற்றும் அறை ஒதுக்கீடு டிசம்பர் 23 அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டு பதிவு செய்து கொண்டனர்.
ஆன்லைனில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்த நன்கொடையாளர்கள் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த 10 நாட்கள் விஐபி தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் புரோட்டோக்கால் வி.ஐ.பிக்கள் நேரில் வந்தால் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஜனவரி 7ம்தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை தேவி பூதேவியுடன் மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஜனவரி 11 வைகுண்ட துவாதசியை முன்னிட்டு அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி இடையே சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும் என்றார்.
திருப்பதியில் 8 மையங்களில் 87 கவுன்டர்கள் மற்றும் திருமலையில் 4 கவுன்டர்கள் என மொத்தம் 91 கவுன்டர்களில் சொர்க்கவாசல் வழியாக சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். ஜனவரி 10, 11 மற்றும் 12 ஆகிய 3 நாட்களுக்குரிய 1.20 லட்சம் டோக்கன்கள் ஜனவரி 9ம்தேதி அதிகாலை 5 மணி முதல் வழங்கப்படும். மேலும் வழக்கமாக டோக்கன்கள் வழங்கப்படும் பூதேவி வளாகம், சீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் காம்பளக்ஸ் ஆகிய இடங்களில் மீதமுள்ள நாட்களுக்கு (19ம்தேதி வரை) தினமும் டோக்கன்கள் வழங்கப்படும். பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க சர்வ தரிசன டோக்கன் பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் திருமலைக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இலவச தரிசன ேடாக்கன் பெற ஆதார் கார்டு முக்கியம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 மணி நேரம் காத்திருப்பு: தற்போது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று 78,414 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 26,100 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.3.45 கோடி காணிக்கை செலுத்தியிருந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள எம்பிசி கட்டிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். ரூ.300 டிக்கெட் பெற்ற சுமார் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசிக்க 91 கவுன்டர்களில் சர்வ தரிசன டோக்கன்: 9ம்தேதி முதல் 19ம்தேதி வரை வழங்கப்படும் appeared first on Dinakaran.