ஒரு மாதமாக உண்ணாவிரதம் இருக்கும் அவரை மருத்துவமனையில் சேர்ப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 20ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், பஞ்சாப் அரசின் எந்த மருத்துவ உதவியையும் தல்லேவால் ஏற்கவில்லை. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘‘நிலைமையை கட்டுப்படுத்த பஞ்சாப் அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. தல்லேவாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்காத விவசாய சங்க தலைவர்கள் தற்கொலைக்கு தூண்டும் கிரிமினல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் அரசு எங்கள் வழிகாட்டுதலுக்கு இணங்கும் என நம்புகிறோம். வரும் 31ம் தேதிக்குள் தல்லேவாலை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
The post ஒரு மாதமாக உண்ணாவிரதம் இருக்கும் தல்லேவாலை டிச.31ம் தேதிக்குள் மருத்துவமனையில் சேர்க்க கெடு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.