மன்மோகன்சிங்கை பா.ஜ அவமதித்து விட்டது ராகுல்காந்தி ஆவேசம்

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இந்திய தாயின் தலைசிறந்த மகனும், சீக்கிய சமூகத்தை சேர்ந்த முதல் பிரதமருமான மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கை நிகம்போத் காட்டில் நடத்தி பாஜ அரசு முழுவதுமாக அவரை அவமதித்து விட்டது.

இதுவரையிலும் அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் சிறப்பு இடம் ஒதுக்கி அங்கு இறுதிசடங்கு நடத்தி தகனம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் எந்த இடர்பாடுகளும் ஏற்பட்டதில்லை. நினைவிடம் கட்டுவதற்கும், உயரிய மரியாதைக்கும் முழு தகுதியானவர் மன்மோகன் சிங். அவருக்கு உரிய மரியாதையை பாஜ அரசு தர வேண்டும்’’ என கூறி உள்ளார்.

The post மன்மோகன்சிங்கை பா.ஜ அவமதித்து விட்டது ராகுல்காந்தி ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: