×

பெண் எப்ஐஆர் தகவலை வெளியிட்ட விவகாரம் அண்ணாமலை மீது வழக்கு பதியவேண்டும்: மதுரை கமிஷனருக்கு வக்கீல் மனு

மதுரை:மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமேஷ், மதுரை போலீஸ் கமிஷனருக்கு ஆன்லைனில் அளித்த புகார் மனு: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான வீடியோவை யூடியூப்பில் பார்த்தேன். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அவரது பேட்டி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்தது. பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் எப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை வெளிப்படையாக பொது வெளியில் கூறியுள்ளார்.

தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 இ மற்றும் பிஎன்எஸ் பிரிவு 356(1), 351(1), 366 ன் படி அவரது செயல் தண்டிக்கக் கூடியது. இப்படியொரு இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டவரின் சம்மதம் இன்றி தகவல்களை கூறுவது அவரது தனியுரிமையை மீறுவதாகும். இதன் விளைவுகளை அறிந்து வேண்டுமென்றே மீறியுள்ளார். எனவே, எப்ஐஆரில் உள்ள விபரங்களை பொதுவெளியில் பரப்பி அத்துமீறி ஒரு பெண்ணை களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துள்ளதால், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post பெண் எப்ஐஆர் தகவலை வெளியிட்ட விவகாரம் அண்ணாமலை மீது வழக்கு பதியவேண்டும்: மதுரை கமிஷனருக்கு வக்கீல் மனு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Madurai ,Sumesh ,SS Colony ,Madurai Police ,Commissioner ,Tamil Nadu ,BJP ,YouTube ,Dinakaran ,
× RELATED எப்ஐஆர் தகவலை வெளியிட்ட அண்ணாமலை மீது...