×

சென்னையில் இருந்து அபுதாபி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு: 178 பயணிகள் தப்பினர்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து ஐக்கிய அரபுநாடான அபுதாபிக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் 168 பயணிகள், 10 விமான ஊழியர்கள் என மொத்தம் 178 பேருடன் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்து உடனடியாக சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த விமானத்தை சென்னையில் மீண்டும் தரையிறக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் மீண்டும் சென்னை விமானநிலைய ஓடுபாதையில் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் 178 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதன்பின்னர் விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு விமானநிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். இதன்பிறகு விமானத்தின் இயந்திர கோளாறுகளை பழுதுபார்க்கும் பணி நடைபெற்று சீரமைக்கப்பட்டு பிறகு சுமார் 4 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டு சென்றது.

The post சென்னையில் இருந்து அபுதாபி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு: 178 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Abu Dhabi ,Chennai airport ,Air Arabian Airlines ,Abu Dhabi, United Arab Emirates ,
× RELATED நடுவானில் தொழில்நுட்ப கோளாறு : அபுதாபி சென்ற விமானம் தரையிறக்கம்