பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

பெரம்பலூர், டிச.27: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கோவில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட வந்த சிறுவனை கைது செய்த போலீசார் திருச்சி சிறுவர் கூர் நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கோவில் உண்டியல் திருட்டு நடை பெற்று வந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பெரம்பலூர் மாவட்டஎஸ்பி ஆதர்ஷ் பசேரா உத்தரவின் படி தனிப்படை அமைத்தும், பகல், இரவுரோந்துபணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (25ஆம் தேதி) பெரம்பலூர் போலீஸ் சப்.இ ன்ஸ்பெக்டர் ராம்குமார், பெரம்பலூர் சங்குபேட்டை பகுதியில் இரவு ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் உட்புறத்தில் மைனர் சிறுவன் கையில் இரும்பு கம்பியுடன் இருந்ததைக் கண்டு அவனைப் பிடித்து விசாரணை செய்ததில் அக்கோவில் உண்டியலை இரும்புக் கம்பியால் உடைத்துத் திருட வந்துள் ளதாக ஒப்புக்கொண்டார்.

அந்த மைனர் சிறுவனை பெரம்பலூர் போலீஸ் ஸ்டே சனுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவன் தொடர்ச்சியாக இது போன்று கோவில் உண்டி யல் திருட்டில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த மைனர் சிறுவன்மீது வழக்குப் பதிவு செய்து அவனிடம் இருந்து ரூ.7,400 பணம் மற்றும் இரும்பு கம்பியை பறிமுதல் செய்த போலீசார் அந்தச் சிறுவனை திருச்சி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: