பெரம்பலூர் பொதுமக்கள் குறை தீர்நாள் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு ரூ.2.51 லட்சத்தில் நலத்திட்ட உதவி

பெரம்பலூர்,டிச.24: பெரம்பலூரில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு ரூ2.51 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (23ஆம் தேதி) திங்கட் கிழமை காலையில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், கலெக்டர் அலுவலக வராண்டாவில் அமரவைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே கலெக்டர் சென்று, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர், வருவாய் துறையின் சார்பில் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு விபத்து மரண உதவித்தொகையாக ரூ1,02,500க்கான காசோலையினையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.22,500 மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித் தொகைக்கான காசோலைகளையும், 4 பயனாளிகளுக்கு ரூ.34 ஆயிரம் மதிப்பீட்டில் திருமண உதவித் தொகைக்கான காசோலைகளையும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ11,445மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர சைக்கிளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.890 மதிப்பீட்டில் ஊன்று கோலையும் என மொத்தம் 18 பயனாளிகளுக்கு ரூ2,51,170 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டக் கலெக்டர் வழங்கினார்.

நேற்றைய கூட்டத்தில் சலவை இயந்திரம் கேட்டு கோரிக்கை வைத்த மனு தாரரின் கோரிக்கையை ஏற்று மறு நிமிடமே மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ், மனுதாரருக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூ.5,700 மதிப்பீட்டிலான சலவை இயந்திர பெட்டியினை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ் ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் போன்ற நிகழ்வுகளில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் சம் பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டக் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பொது மக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை தொழில் தொடங்க கடனுதவி, வீட்டு மனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதர வற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், வருவாய்த்துறை தொடர் பான சான்றுகள், அடிப் படை வசதிகள் கோருதல் உட்படபல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்டகலெக்டர், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத் திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத் திடுமாறும், துறை அலுவல ர்களுக்குஅறிவுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 392 மனுக்களை மாவட்டக் கலெக்டர் பெற் றுக்கொண்டார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரமேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர் கார்த்திக்கேயன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தர ராமன், மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லர் சுரேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் பொதுமக்கள் குறை தீர்நாள் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு ரூ.2.51 லட்சத்தில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Related Stories: