பெரம்பலூர், டிச.21: சிறுவாச்சூர், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் சென்னை மியாட் மருத்துவமனை இணைந்து நடத்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணத்துவ இலவச மருத்துவ முகாம் சிறப்பாக முடிவடைந்தது. இம்முகாமில் டாக்டர் கார்த்திக் மதிவாணன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், முன்னணி உரை வழங்கி, நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
சுமார் 70க்கும் மேற்பட்ட நோயாளிகள் முகாமில் கலந்து கொண்டு தங்களுடைய ஆரோக்கியம் குறித்து பயனடைந்தனர். முகாமின் முக்கிய அம்சங்கள்: கல்லீரல் நோய் பற்றிய விழிப்புணர்வு, கல்லீரல் செயலிழப்பு, சிரோசிஸ் போன்ற நோய்கள் மற்றும் அவற்றின் விளைவுகளைப் பற்றி நோயாளிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சிகிச்சை முறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நோயாளிகளுக்கு தனிப்பட்ட கவனம் அளித்து, கல்லீரல் பிரச்சனைகளின் அளவை மதிப்பீடு செய்யப்பட்டது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவையான நோயாளிகளுக்கு அதற்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்டவர்கள் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மியாட் மருத்துவமனை வழங்கிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்தனர். இது நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்தது. தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மியாட் மருத்துவமனை இணைந்து செய்யக்கூடிய இத்தகைய கூட்டு செயல்பாடுகள் மருத்துவ நிபுணர்களின் திறன் மற்றும் சேவைகளை பொதுமக்களுக்கு எளிய வகையில் சென்று அடையக் கூடியதாகும்.
The post சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இலவச கல்லீரல் சிகிச்சை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.