பெரம்பலூர், டிச. 21: பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில், அம்மா பாளையம் முதன்மை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ பிரிவு கண் மருத்துவர் செந்தில்நாதன் தலைமையில், மருத்துவக் குழுவினர் நடத்திய கண் பரிசோதனை முகாம் பள்ளி யின் தலைமை ஆசிரியை பூங்கோதை முன்னிலை யில் நடைபெற்றது. இதில் சிறப்பு நிலை கண் மருத்துவர் செந்தில்நாதன் தலைமையில் கலந்து கொண்ட மருத்துவக் குழு வினர் நடத்திய பரிசோத னையின் அடிப்படையில் கண்கண்ணாடி
அணிவதற் குப் பரிந்துரைக்கப்பட்டது.
இவ்வாறு பரிந்துரைக்கப் பட்ட 34 மாணவ, மாணவி களுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை பூங்கோதை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், கண் கண்ணாடிகள் இலவ சமாக வழங்கப்பட்டது. இதில் சிறப்பு கண் பயிற்சி ஆசிரியர் பாப்பாத்தி மற் றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 34 மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் கண்ணாடி appeared first on Dinakaran.