அரியலூர் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த மகளிருக்கு அவ்வையார் விருது

அரியலூர், டிச 27: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட மதநல்லிணக்கம், மொழித்தொண்டு ஆற்றிய சிறந்து விளங்கும் மகளிருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளதால் தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டசெய்தி குறிப்பு:சர்வதேச மகளிர் தின விழா ஆண்டு தோறும் மார்ச் 8-ல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிர் ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றம் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் கீழ்கண்டவாறு விதிமுறைகள் மற்றும் கையேட்டில் இணைக்கப்பட வேண்டிய விவரம் தெரிவிக்கப்படுகிறது. 2025 ம் ஆண்டு அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள் பின்வருமாறு, தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்த்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் பத்திரிக்கை மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கன இச்சமூகசேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பிட வேண்டும்.

கையேட்டில் இணைக்கப்பட வேண்டியவை, பொருளடக்கம் மற்றும் பக்க எண் இவ்விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் சுய விபரம் தரவு சுயசரிதை (ம) பாஸ்போட் புகைப்படம் 2, மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை கடிதம், மாவட்ட சமூக நல அலுவலரின் பரிந்துரை கடிதம், ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (Bulletin Points), தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலம் (Verdana) தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் விருதின் பெயர் மற்றும் யாரிடமிருந்து பெறப்பட்டது மற்றும் பெற்ற வருடம் மற்றும் விருது பெற்றதிற்கான காரணம், கையேட்டில் விருது பெற்ற புகைப்படம், சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் மற்றும் பக்கங்களுக்கு குறிப்பு வைக்கவும், சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு சமூக சேவையாளரின் மற்றும் சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், தொண்டு நிறுவனத்தின் பதிவு உரிமம், ஆண்டறிக்கை சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று, இணைப்பு – படிவம் தமிழ் (மருதம்) மற்றும் ஆங்கிலம் (Verdana) முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்இ கையேடு (Booklet) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பப்பட வேண்டும்.

இவ்விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 31. மேலும் விண்ணப்ப விவரங்கள் தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் < https://awards.tn.gov.in/ > விண்ணப்பித்து அதன் நகலினை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அறை எண்:20, தரைத்தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த மகளிருக்கு அவ்வையார் விருது appeared first on Dinakaran.

Related Stories: