புதுக்கோட்டை,டிச.27: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் ஐந்து ஆண்டுகள் நிறைவு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் நல தேவன், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் செந்தில்குமார், ஒன்றிய குழு துணை தலைவர் ஆனந்தி ஞான இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் ஐந்து ஆண்டுகள் ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தை அமைதியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து கவுன்சிலர்களுக்கும் அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்தார். கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்து பேசினர். முன்னதாக அனைவரையும் ஒன்றிய நிர்வாக மேலாளர் ராஜ முனுசாமி வரவேற்று பேசினார். நிர்வாக கணக்கர் திருநாவுக்கரசு வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார்.
The post திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு 5 ஆண்டு நிறைவு கூட்டம் appeared first on Dinakaran.