பிச்சாவரத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

புவனகிரி, டிச. 27: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பிச்சாவரத்தில் உலக பிரசித்தி பெற்ற மாங்குரோவ் காடுகள் உள்ளன. சுரபுன்னை தாவரங்களைக் கொண்டு அடர்த்தியாக காணப்படும் இந்த காட்டு பகுதியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைவர். கடந்த சில வாரங்களாகவே தொடர் மழை, புயல் போன்ற காரணங்களால் பிச்சாவரம் சுற்றுலா மையம் களை இழந்து காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற தொடர் பண்டிகை மற்றும் விடுமுறைகளால் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பிச்சாவரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்தில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். துடுப்பு படகுகள் மற்றும் மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் காட்டுப் பகுதிக்கு சென்று இயற்கையின் அழகை ரசித்தனர்.

The post பிச்சாவரத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: