திருமயம்,டிச.27: அரிமளம், தல்லாம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (27ம் தேதி) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூர், எத்திக்காடு, பொந்துப்புளி, ஓணாங்குடி, சிராயம்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்களம், மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையம் மூலம் மின் வினியோகம் பெறும் மேல்நிலைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூர், கீரனிப்பட்டி, தேனிப்பட்டி, வம்பரம்பட்டி, வாழ்ரமாணிக்கம், கரையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (27ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவசரகால பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும் என திருமயம் கோட்ட உதவி செயற்பொறியாளர் கீதாஞ்சலி (பொ) வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூழ்நிலைக்கு ஏற்ப மின் நிறுத்த அறிவிப்பில் மாற்றம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அரிமளம் பகுதியில் இன்று மின்விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.