சிறு வணிக கடன் பெறும் திட்டத்தில் எனது குடும்பத்தை செழிப்படைய செய்த தமிழக முதல்வருக்கு நன்றி

திருச்சி, டிச.27: சிறு வணிக கடன்பெறும் திட்டத்தில் எனது குடும்பத்தை செழிப்படைய செய்த தமிழக முதல்வருக்கு நன்றி என்று பயனடைந்த பெண் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறையின் மூலம் பயனடைந்த பயனாளிகள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர், இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், இன்னுயிர் காக்கும் – நம்மைக் காக்கும் 48, புதுமைப்பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், கள ஆய்வில் முதலமைச்சர் மற்றும் மக்களுடன் முதல்வர், கலைஞாின் கனவு இல்லம் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகிறது.

இந்நிலையில் அரசின் அனைத்து நலத்திட்டம், சேவைகளும் தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட இந்த அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவையொட்டி, அவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, நாசர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு 469 பயனாளிகளுக்கு ரூ.26.77லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், சிறுபான்மையினா் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நினைவு பாிசுகளையும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பயனாளி ஆயிஷா பேசியது, நான் லால்குடி அடுத்த பெருவளநல்லூர் கிராமத்தில் வசிக்கிறேன். இஸ்லாமிய சமுதாயத்தை சோ்ந்த என்னுடைய குடும்பம், பொருளாதார வசதியின்றி உள்ளது. என் குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லாததால் வறுமை நிலையில் வாடினோம். இந்நிலையில் சிறுபான்மை நலத்துறையில், சிறு வணிக கடன் உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருந்தேன். எனது நிலை கருதி ஆடு வளா்ப்பு திட்டத்தில் எனக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. இதன் மூலம் எனது குடும்பம் முன்னேற வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை ஏற்படுத்தி தந்த தமிழ்நாடு முதல்வர் நன்றி என்றார்.

பயனாளி அருள்மணி பேசுகையில், நான் கல்கொத்தம்பட்டி, அமயபுரம் கிராமம், மஞ்சம்பட்டி, மணப்பாறையில் வசித்து வருகிறேன். நான் 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நான் திருச்சி மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் பொருளாதாரத்தில் பிற்பட்ட கிறிஸ்தவ மகளிர், பொருளாதார உதவி பெறும் திட்டத்தில் கடனுதவி பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன். எனது விண்ணப்பம் உடனடியாக பாிசீலிக்கப்பட்டு சிறு வணிக கடன் பெறும் திட்டத்தில் ரூ.10 ஆயிரம் ஆடு வளா்க்கும் திட்டத்தில் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் எனது குடும்ப வருமானம் பெருகும். இத்திட்டத்தை வழங்கி எங்கள் வாழ்வை செழிப்படைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி என்றார்.

The post சிறு வணிக கடன் பெறும் திட்டத்தில் எனது குடும்பத்தை செழிப்படைய செய்த தமிழக முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.

Related Stories: