பள்ளியில் படிப்பை தொடராமல் இடை நின்றவர்களுக்கு கல்வி: சிறப்பு வகுப்புகள் துவக்கம்

 

பேரையூர், டிச. 27: பேரையூரில், பள்ளியில் இடைநிற்றல் கண்ட 18 முதல் 35 வயது வரையிலானோருக்கு கல்வி அளிக்கும் சிறப்பு வகுப்புகள் நேற்று துவங்கியது. பேரையூர் அண்ணாநகரில் 18 முதல் 35 வயது வரையில், பள்ளிக்கல்வியில் இடை நின்றவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் வகுப்புகள் துவங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக பேரூர் கழக செயலாளர் வருசை முகம்மது, பேரூராட்சி துணைச் சேர்மன் பிரியதர்ஷினி ஆகியோர் தலைமை தாங்கினர்.

அரசு சார்பு வங்கியின் மதுரை கோட்ட துணை மேலாளர் அஞ்சலிதாஸ், டெல்லி இந்திய வளர்கல்வி சங்க முதல்வர் ராஜா முன்னிலை வகித்தனர். இதில் பள்ளிக்கல்வியை தொடராமல் இடை நின்ற 18 முதல் 35 வயது வரையிலானோர் மற்றும் கல்வி பயிலாவதவர்களுக்கு தொடர்ந்து 3 மாதங்களுக்கு மாலை நேரங்களில் எண்ணும், எழுத்தும் என்ற தலைப்பில் கற்றல் வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த வகுப்புகளை எடுப்பவர்களாக தன்னார்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.

The post பள்ளியில் படிப்பை தொடராமல் இடை நின்றவர்களுக்கு கல்வி: சிறப்பு வகுப்புகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: