ஒரே சமயத்தில் 2 கன்று ஈன்ற பசு

கடத்தூர், டிச. 27: கடத்தூர் ஒன்றியம், தாளநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சீதாலட்சுமி(50). இவர் வளர்த்து வரும் பசு, நேற்று காலை 2 கன்றுகளை ஈன்றது. பொதுவாக பசு மாடு ஒரு பிரசவத்தில் ஒரு கன்றை மட்டுமே ஈனும். அபூர்வமாக சில நேரங்களில் கூடுதல் கன்றுகள் ஈனுவது உண்டு. சினையாக இருந்த ஜெர்சி இன பசு, ஒரு கன்று குட்டியை ஈன்றது. சிறுது நேரம் கழித்த நிலையில், மற்றொரு கன்றையும் ஈன்றது. இரு கன்றுகளை ஒரே பிரசவத்தில் ஈன்ற பசுவை, அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறுகையில், ‘ஆயிரத்தில் ஒரு முறை இதுபோல் நடைபெறும். பொதுவாக இரண்டு ஆண், அல்லது ஒரு ஆண், ஒரு பெண் என கன்றுகளை ஈனுவது வழக்கம். இந்த பசு ஒரே நேரத்தில் இரண்டு பெண் கன்றுகளை ஈன்றது ஆச்சரியம். தற்போது இரு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளது,’ என்றார்.

The post ஒரே சமயத்தில் 2 கன்று ஈன்ற பசு appeared first on Dinakaran.

Related Stories: