மாடுகள் சாலைகளில் திரிந்தால் பறிமுதல்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

 

மதுரை, டிச. 25: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாங்கள் வளர்க்கும் மாடுகள் தெருக்கள், சாலைகளில் கொண்டியாக சுற்றித் திரிகின்றன. எனவே மாடுகளை வளர்ப்போர் தங்கள் மாடுகளை தங்களுக்கு சொந்தமான இடங்களில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும் என மாநகராட்சியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாடுகள் சாலையோரம் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிந்தால் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு ஏலத்திற்கு விடப்படும்.

எக்காரணம் கொண்டும் உரிமையாளர்கள் வசம் மாடுகள் திரும்பி தரப்பட மாட்டாது. மாட்டின் உரிமையாளர்கள் சாலைகள் மற்றும் தெருக்களில் கால்நடைகளை திரிய விடாமல் பாதுகாப்பாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளப்பட வேண்டும், தவறும்பட்சத்தில் மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூதாட்டியை தாக்கிய 2 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாடு பிடி வீரர்கள் குழுவினர் அந்தந்த சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் வலம் வருகின்றனர். எங்காவது சாலைகளில் மாடுகள் கண்டபடி திரிந்தால் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

The post மாடுகள் சாலைகளில் திரிந்தால் பறிமுதல்: மாநகராட்சி அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: