செயின் பறித்த செல்போன் கடைக்காரர்

பெரம்பூர்: கொளத்தூர் நேர்மை நகரை சேர்ந்தவர் தாரா (47). ஐ.சி.எப் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 20ம் தேதி வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், தாரா கழுத்தில் கிடந்த 2 சவரன் செயினை பறித்தனர். தாரா, செயினை பிடித்துக் கொண்டதால், செயின் 2 துண்டுகளாக அறுந்து, ஒரு பாதி செயினுடன் கொள்ளையர்கள் தப்பினர். புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பைக் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.

அதில், அழிஞ்சிவாக்கம் வடகரை மேட்டு தெருவை சேர்ந்த அஜித்குமார் (26) என்பவரை நேற்று முன்தினம் இரவு பிடித்தனர். இவர், அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருவதும், அதே பகுதியை சேர்ந்த பட்டறை ஊழியர் சுதாகர் (30) என்பவருடன் சேர்ந்து, செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்தனர்.

The post செயின் பறித்த செல்போன் கடைக்காரர் appeared first on Dinakaran.

Related Stories: