மாணவி பாலியல் வன்கொடுமை போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: அண்ணா பல்கலை பதிவாளர் உறுதி

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக, கிண்டி பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், ராஜா அண்ணாமலைபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரை கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆணையர் தலைமையில், ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலையக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக உள் புகார்க் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மாணவி பாலியல் வன்கொடுமை போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: அண்ணா பல்கலை பதிவாளர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: