அப்போது அந்த இளம்பெண், ‘‘இது தொடர்பாக எனது தாயிடம் பேசுங்கள்,’’ எனக்கூறி தனது தாயிடம் போனை கொடுத்துள்ளார். அந்த நபர், இளம்பெண்ணின் தாயிடம், ‘‘உங்கள் பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்,’’ என தெரிவித்துள்ளார். அதற்கு இளம்பெண்ணின் தாய், ‘‘உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களை நேரில் வந்து முறையாக எனது மகளை பெண் பார்க்க அழைத்து வாருங்கள்,’’ என்று கூறியுள்ளார். அதற்கு, பூர்ணநாதனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பூர்ணநாதன் அடிக்கடி இந்த இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியும், போனில் அழைத்தும் இனிக்க இனிக்க பேசி வந்துள்ளார். அந்த இளம்பெண்ணும், வருங்கால கணவராக வரப்போகிறார் என்ற ஆர்வத்தில், பூர்ணநாதனிடம் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பூர்ணநாதன், இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, ‘‘சூரிய உதயத்தின் போது உன் அழகான முகத்தை நான் பார்க்க வேண்டும்’’ என கூறி, மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது அறைக்கு அழைத்துள்ளார்.
இளம்பெண்ணும், வருங்கால கணவர் தானே என்ற ஆசையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை 3 மணிக்கு எழுந்து ‘குளித்துவிட்டு, ஆடை அலங்காரத்துடன் பூர்ணநாதன் அறைக்கு அதிகாலை 5.30 மணிக்கு வந்துள்ளார். அதிகாலை தலையில் குண்டு மல்லி சூடியடி, இளம்பண் வந்ததை கண்ட பூர்ணநாதன் மகிழ்ச்சியடைந்தது தனது அறைக்குள் அழைத்துள்ளார். இருவரும் சிறிது நேரம் எதிர்காலம் பற்றி பேசியுள்ளனர். பின்னர் பூர்ணநாதன் திடீரென இளம்பெண்ணை கட்டியணைத்து முத்தம் கொடுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத இளம்பெண், பூர்ணநாதனை கண்டித்துள்ளார்.
அப்போது பூர்ணநாதன், ‘‘விரைவில் நாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம். அதனால், இது ஒன்றும் தவறில்லை,’’ என்று கூறியபடி மீண்டும் அத்துமீற முயன்றுள்ளார். இதனால், இளம்பெண் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றுள்ளார். உடனே பூர்ணநாதன், ‘இங்கு நடந்த சம்பவத்தை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளேன். அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன், என மிரட்டி, இளம்பெண் கழுத்தில் கிடந்த 10 கிராம் செயினை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, இளம்பெண் கழுத்தில் இருந்த 10 கிராம் செயின் இல்லாததால் இதுபற்றி அவரது தாய் கேட்டுள்ளார். அதற்கு இளம்பெண் மழுப்பலாக பதில் அளித்துள்ளார். பின்னர், அதிகாலை எங்கே சென்று வருகிறாய், என கேட்டுள்ளார். அப்போதுதான் இளம்பெண், தனக்கு நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் வேறு வழியின்றி சம்பவம் குறித்து தாயின் அறிவுரைப்படி இளம்பெண் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பூர்ணநாதனை பிடித்து, அவர் மீது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது, நகை பறித்தது, மிரட்டியது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிராம் ெசயினும் பறிமுதல் செய்யப்பட்டது.
The post சூரிய உதயத்தின் போது உன் முகத்தை பார்க்க வேண்டும் என இளம்பெண்ணை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை: மேட்ரிமோனியலில் அறிமுகமான வாலிபர் கைது; 10 கிராம் செயினை பறித்து மிரட்டியது அம்பலம் appeared first on Dinakaran.