இதனை நம்பிய சுந்தரமூர்த்தி ரூ.50 லட்சத்திற்கான ஏலச்சீட்டு, 20 மாதம் கட்டி வந்துள்ளார்.
இந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் கடைசி தவணையை கழித்துவிட்டு, அசல் தொகையை கொடுக்குமாறு சுந்தரமூர்த்தி கேட்டபோது பிலோமினா, சுந்தரமூர்த்தியை அலுவலகத்துக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து சுந்தரமூர்த்தி அலுவலகத்துக்கு சென்றபோது, பிலோமினா, அவரது கணவர் ஜான் பியர் மற்றும் மணி ஆகியோர், தங்களுக்கு அரசியல்வாதிகளை தெரியும். பணம் கேட்டு மீண்டும் வந்தால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தரமூரத்தி, முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பிலோமினா, அவரது கணவர் ஜான்பியர் மற்றும் மணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் பிலோமினா மற்றும் அவரது கணவர் ஜான்பியர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. பிலோமினா புதுச்சேரியின் இளம் எம்எல்ஏவின் அத்தை என்று கூறி, ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட பொதுமக்கள் பலரிடம் ரூ.1 கோடி, ரூ.50 லட்சம் என ஏலச்சீட்டு நடத்தி வந்ததும், அவர்களுக்கு சீட்டு பணத்தை திருப்பி தராமல் ரூ.5.50 கோடி வரை வசூலித்து ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் பிலோமினாவிடம் ஏமாந்த பலர் காவல்நிலையத்தில் தொடர்ச்சியாக புகார் அளித்து வருகின்றனர். அதில் ரூ.20 கோடி வரை மோசடி நடந்திருப்பதாகவும், ஆனால் குறைவான தொகையை போலீசார் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். இளம் எம்எல்ஏ, தனது அத்தை என அறிமுகம் செய்து வைத்து, நம்பிக்கையானவர் இவரிடம் சீட்டு கட்டுங்கள் எனக்கூறியுள்ளார். இதனை நம்பிய மாஜி அமைச்சர், எம்எல்ஏ, தொழிலதிபர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள், காவல்துறையினர் வரை சீட்டு கட்டியுள்ளனர். தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து, எனது பணத்தையாவது முதலில் மீட்டு கொடுங்கள் என அழுத்தம் தருகிறார்களாம். சில முக்கிய புள்ளிகள் அரசியல் அழுத்தம் காரணமாக தங்களுக்கான பணத்தை மட்டும் மீட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தனிப்பட்ட தகவல்களை தர முடியாது. அதேபோல் சம்மந்தப்பட்ட நபர்களிடமிருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்’ என்றனர்.
The post புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி தம்பதியிடம் ஏமாந்த மாஜி அமைச்சர், எம்எல்ஏ: விசாரணையில் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.