அரியலூர், டிச. 18: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 20ம் தேதி நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு; அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 20 அன்று மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம்.
The post டிசம்பர் 20 தேதி நடக்கிறது எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.