தேனி, டிச.24: தேனி அருகே அரண்மனைப்புதூர் அம்பேத்கர் சிலை பகுதியில் இருந்து பேரணியாக கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டரிடம் மனு அளிக்க அனுமதி கேட்டு காங்கிரஸ் சார்பில் தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பியிடம் காங்கிரசார் மனு அளித்தனர். தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர் முருகேசன் தலைமையிலான நிர்வாகிகள் சார்பில் நேற்று தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி சிவபிரசாத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இம்மனுவில், தேனி அருகே அரண்மனைப்புதூரில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு இன்று(24ம்தேதி) காங்கிரஸ் சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, அம்பேத்கர் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசுத் தலைவருக்கு கலெக்டர் மூலமாக மனு அளிக்க அரண்மனைப்புதூரில் இருந்து பேரணியாக புறப்பட்டு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தி இருந்தனர்.
The post பேரணிக்கு அனுமதி கோரி காங்கிரசார் மனு appeared first on Dinakaran.