ஜோலார்பேட்டை, டிச. 24: கொத்தூர் அருகே விவசாய நிலத்தில் அடிபட்டு விழுந்து கிடந்த ஆண் மயிலை விவசாயி மீட்டு நேற்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு நாட்றம்பள்ளி அருகே உள்ள கொத்தூர் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை நிலத்தை பார்க்க சென்றபோது இவரது நிலத்தில் ஆண் மயில் ஒன்று இறக்கையில் அடிபட்டு விழுந்து கிடந்தது. இதை அறிந்த விவசாயி கிருஷ்ணன் என்பவர் அந்த ஆண் மயிலை மீட்டு வீட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் விவசாயி மீட்டு வைத்திருந்த ஆண் மயிலை பெற்றுக் கொண்டு பாராட்டினர். பின்னர் மயிலை சிகிச்சை அளிக்கப்பட்டு அருகாமையில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
The post விவசாய நிலத்தில் அடிபட்டு விழுந்து கிடந்த ஆண்மயில் மீட்பு வனத்துறையினரிடம் ஒப்படைப்பு ஜோலார்பேட்டை அருகே appeared first on Dinakaran.