ஜோலார்பேட்டை, டிச. 24: திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு சவரன் நகை, 7 ஆயிரம் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செல்லரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (55). இவரது கணவர் இறந்த நிலையில் இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20ம் தேதி திருப்பூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று மீண்டும் நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு மனோன்மணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ஒரு சவரன் தங்க நகை மற்றும் வீட்டில் பொருத்தி இருந்த எல்.ஈ.டி டிவி, ₹7 ஆயிரம், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்தில் மனோன்மணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நகை பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post வீட்டின் பூட்டை உடைத்து ஒரு சவரன் நகை, 7 ஆயிரம் பணம் திருட்டு மர்ம நபருக்கு போலீசார் வலை திருப்பத்தூர் அருகே appeared first on Dinakaran.