டெல்லியில் ரூ.33 கோடி போதைப்பொருள் பறிமுதல்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 11ம் தேதி பிரேசிலில் இருந்து ஒருவர் வந்துள்ளார். சோதனையின்போது அவர் போதைப்பொருள் கேப்ஸ்யூல்களை உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையின் மூலமாக அவர் உட்கொண்ட கேப்ஸ்யூல்கள் அகற்றப்பட்டது.

சுமார் 127 கேப்ஸ்யூல்கள் வெளியேற்றப்பட்டது. இவற்றில் மொத்தம் 1383கிராம் கோகைன் கடத்தி வரப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.21 கோடியாகும். மற்றொரு சம்பவத்தில் எத்தியோப்பியாவில் இருந்து வந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நபர் பிடிபட்டார். இவரும் போதைப்பொருள் கேப்ஸ்யூல்களாக உட்கொண்டு கடத்தி வந்துள்ளார். அவரிடம் இருந்து 67 கேப்ஸ்யூல்கள் மீட்கப்பட்டது. 799கிராம் போதைப்பொருளின் மதிப்பு ரூ.12 கோடி. இருவரும் கைது செய்யப்பட்ட னர்.

The post டெல்லியில் ரூ.33 கோடி போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: