ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி போர்வெல் குழிக்குள் தவறி விழுந்ததால், அவரை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தைச் சேர்ந்த சேத்துனா (3) என்ற பெண் குழந்தை, சாருண்டு பகுதியிலுள்ள தனது தந்தைக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த 150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் குழுக்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பிளாஸ்டிக் குழாய் உதவியுடன் சிறுமிக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்படுகிறது. கேமரா மூலம் குழிக்குள் சிக்கியிருக்கும் சிறுமியின் இயக்கத்தை மீட்புக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். குழிக்கு அருகே ஜே.சி.பி இயந்திரம் மூலம் மற்றொரு குழி தோண்டப்பட்டு வருகிறது. மீட்புக் குழுவினருடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து விடிய விடிய மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்துளை கிணற்றிலிருந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பதால், சிறுமியை மீட்பதற்காக நடவடிக்கையை மீட்புக் குழுவினர் முடுக்கிவிட்டு உள்ளனர்.
The post விளையாடிக் கொண்டிருந்த போது போர்வெல் குழிக்குள் சிக்கிய 3 வயது சிறுமி: ராஜஸ்தானில் மீட்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.