3 மணிநேர விசாரணைக்குப் பிறகு வீடு திரும்பினார் நடிகர் அல்லு அர்ஜுன்!

திருமலை: நடிகர் அல்லு அர்ஜுனிடம் ஹைதராபாத் போலீஸார் நடத்திய 3 மணிநேர விசாரணை நிறைவடைந்தது. நடிகர் அல்லுஅர்ஜூன் நடித்த புஷ்பா-2 படத்தின் பிரீமியம் ஷோ கடந்த 4ம்தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் வெளியிடப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை காண்பதற்காக அல்லுஅர்ஜூன் அன்றிரவு 9 மணிக்கு தியேட்டருக்கு சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்தார். மயங்கி விழுந்த அவரது மகன் ஸ்ரீதேஜ் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இதுதொடர்பாக சிக்கடப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். அவரை நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் உயர்நீதிமன்றம் அவருக்கு 4 வாரத்திற்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதால், சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிக்கடப்பள்ளி போலீசார், அல்லு அர்ஜூனுக்கு இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினர். அதன்படி அல்லு அர்ஜுன் தனது வழக்கறிஞருடன் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

அவரிடம் ஹைதராபாத் மத்திய மண்டல காவல் ஆணையர் அக்ஷன்ஷ் யாதவ் 3 மணிநேரமாக விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, தனது தந்தை அல்லு அரவிந்துடன் பகல் 2 மணியளவில் விசாரணை நிறைவடைந்து காவல் நிலையத்தில் இருந்து அல்லு அர்ஜுன் வீடு திரும்பியுள்ளார்.

The post 3 மணிநேர விசாரணைக்குப் பிறகு வீடு திரும்பினார் நடிகர் அல்லு அர்ஜுன்! appeared first on Dinakaran.

Related Stories: