தினசரி உணவில் பயன்படுத்தப்படும் காய்கறிகள் அனைத்தும் விலை ஏறி விட்டதாகவும், ஒரு கிலோ பூண்டு ரூ.400க்கும், பட்டாணி ரூ.120க்கும் விற்கப்படுவதாக சந்தையில் இருந்த பெண்கள் ராகுல் காந்தியிடம் தெரிவித்தனர். இந்நிலையில், நாடு முழுவதும் தொடரும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட் பாதிக்கப்பட்டுள்ளதால் சாமானிய மக்கள் எதை சேமிப்பார்கள் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் பாஜக அரசு கும்பகர்ணன் போல் உறங்குவதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
The post டெல்லியில் காய்கறி சந்தைக்குச் சென்ற ராகுல்.. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் பாஜக அரசு கும்பகரணன் போல் உறங்குவதாக விமர்சனம்!! appeared first on Dinakaran.