நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட விவகாரம்: 3 தனிப்படைகள் அமைப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக வந்த போது மாயாண்டி என்ற இளைஞரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. தப்பியோடிய 6 பேரில் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் திருநெல்வேலி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா ஆய்வு மேற்கொண்டார்.

The post நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட விவகாரம்: 3 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: