ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை வழங்கப்படும்: ரயில்வே வாரியம் அறிவிப்பு

சென்னை: ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM மூலம் டிக்கெட் எடுத்தால் 3% கேஷ்பேக் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே வாரிய உத்தரவின்படி, 20 டிசம்பர் 2024 முதல் ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM (Automatic Ticket Vending Machine) மூலம் UTS டிக்கெட் எடுக்கும்போது, டிக்கெட் கட்டணத்தில் 3% கேஷ்பேக் வழங்கப்படும். இதற்கு முன்பு, R-வாலெட்டை ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது.

இந்த புதிய வசதி, அனைத்து வகையான முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை UTS மொபைல் செயலியில் உள்ள R-வாலெட் அல்லது ATVM மூலம் வாங்கும் ரயில் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெறுவதை தவிர்க்கும் விதமாக, UTS மொபைல் ஆப் மூலம் எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

The post ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை வழங்கப்படும்: ரயில்வே வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: