தொடர்ந்து, முதன்மைத் தேர்விற்கு தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்வர்கள் தேர்வு மையம் தேர்தெடுக்க மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த டிசம்பர் 18-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வின் முதல் தாள் தேதி மாற்றப்பட்டுள்ளது. மேலும், 2ஏ பதவிக்கான இரண்டும் தாள் தேர்வு முறையும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அண்மையில் கணினி வழியில் நடத்தப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கான தேர்வில் குளறுபடி ஏற்பட்டதால், குரூப்2ஏ தேர்வையும் பழைய முறையிலேயே, அதாவது ஓஎம்ஆர் தாள்களில் நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2, 2ஏ தேர்வு OMR ஷீட் முறையில் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 2 பதவிகளுக்கு முதன்மைத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டு விரிவாக விடையளிக்கும் வகையில் நடைபெறும். முதல் தாள் – தமிழ் தகுதி தாள் மற்றும் இரண்டாம் தாள் – பொது தாள் ஆகும். இரண்டு தாள்களும் விரிவாக விடை அளிக்கும் வகையில் அமையும். குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல் தாள் – தமிழ் தகுதி தாள் மற்றும் இரண்டாம் தாள் – 3 பிரிவு கொண்ட பொது தாள் ஆகும். முதல் தாள் விரிவாக விடை அளிக்கும் வகையிலும், இரண்டாம் தாள் கொள்குறி வகையிலும் (Objective) அமையும்.
The post குரூப் 2, 2ஏ தேர்வு, Optical Mark Recognition (OMR) முறையில் நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு appeared first on Dinakaran.