×

மணிப்பூரில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு

இம்பால்: மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இரண்டு தீவிரவாத அமைப்பின் முகாம்களை பாதுகாப்பு படையினர் அழித்தனர். மணிப்பூரில் உள்ள இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோகோ பவுராபியில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான காங்லெய் யாவோல் கன்னா லூப் அமைப்பின் முகாம் கண்டறியப்பட்டது. முகாமை சோதனை செய்த பாதுகாப்பு படையினர் அதில் இருந்த துப்பாக்கி, செல்போன், குண்டு துளைக்காத ஹெல்மெட் உள்ளிட்டவற்றை கைப்பற்றினார்கள்.

இந்த முகாமை பாதுகாப்பு படையினர் அழித்தனர். கடந்த மூன்று நாட்களில் மிரட்டி பணம் பறித்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டில் இந்த அமைப்பை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் அதே பகுதியில் மற்றொரு தடை செய்யப்பட்ட அமைப்பான பிஆர்இபிஏகேயின் பயிற்சி முகாமையும் பாதுகாப்பு படையினர் கண்டறிந்து அழித்தனர். இங்கிருந்து குண்டுகள், மரத்தினால் செய்யப்பட்ட போலி துப்பாக்கிகள், இரண்டு வாக்கி-டாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மணிப்பூரில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Imphal East district ,Mogo Paurabi… ,Dinakaran ,
× RELATED மணிப்பூர் முதல்வர் வீடு அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு